போக்குவரத்து அல்லது இயக்கம் (Mobility)

Mobility என்பது இன்று ஆட்டோமொட்டிவ் துறையில் ஒரு பரந்த பொருளாக மாறிவிட்டது. இது எந்தவொரு வாகனத்தின் மூலம் பயணிகளை, பொருட்களை, மற்றும் சேவைகளை இயக்குவது மட்டுமின்றி, பொது போக்குவரத்து, சேவை, மற்றும் நகர்வுத்திறன் ஆகியவற்றை இணைக்கும் ஒரு கருத்தாகும். சொல்லப்போனால், நமது ஒவ்வொரு பயணம், இப்போது எந்தவொரு வாகனத்தை மட்டுமல்ல, அதன் சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளைப் பின்பற்றுகிறது. Mobility-யின் பொருள்: சிறிது நேரம் முன்பு, “Mobility” என்பது நம்மால் ஏற்கனவே அறிந்த, எளிய வழியில் பயணிப்பதை மட்டுமே குறித்தது—உதாரணமாக, ஒரு கார் அல்லது பஸ். ஆனால் இப்போது, அது முற்றிலும் மாற்றப்பட்டிருக்கிறது. இன்றைய Mobility என்பது மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளின் சமூகம் ஆகும். ...

March 26, 2023

வீட்டு வைத்தியம் (மறக்கப்படும் எளிய மருத்துவமும் மூலிகைச் செடிகளும்) ஒரு தொகுப்பு

சில எளிய வீட்டு மருத்துவ முறைகளும் சில மூலிகை செடிகளும் : **ஒரு தொகுப்பு ** நம் முன்னோர்கள் பலப்பல இயற்க்கை மருத்துவ முறைகளையும் மூலிகைகளையும் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அக்காலத்தில் பெரிய மருத்துவ வசதிகள் இல்லை எனினும் அவர்களால் ஆரோக்கியமாக வாழ முடிந்தமைக்கு காரணம் இந்த மூலிகைகளும் எளிமையான வீட்டு மருத்துவ முறைகளுமே! அந்த மூலிகை செடிகளை பற்றிய தகவல்களையும் , மருத்துவ குணங்களையும் அழிய விடாமல் காப்பாற்ற ஒரு சிறிய முயற்சி. இந்த தகவல்கள் எல்லாம் நடைமுறைக்கு உட்படுத்த பட்டவை அல்ல. எச்சரிக்கையுடன் மட்டுமே பின்பற்ற வேண்டும். நான் எந்தவித இழப்பிற்கும் பொறுப்பல்ல. உங்களுக்கு மூலிகை செடிகள் பற்றிய தகவலும் அதனுடைய மருத்துவ குணங்களும் தெரிந்தால் எனக்கு இ -மெயில் செய்யவும் . ...

October 8, 2015

தட்டைப் பயறு குழம்பு செய்வது எப்படி!

எனக்கு இந்த தட்டைப்பயறு குழம்பு ரொம்ப பிடிக்கும் , அதனால இன்னைக்கி அத ட்ரை செஞ்சேன் . நீங்களும் பிடிச்சிருந்தா செஞ்சு பாருங்க. சரியா வரலன்னா பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் நு விட்டுடுங்க! :) :) :) தட்டைப் பயறு குழம்பு எப்படி செய்வது பற்றிய சிறு குறிப்பு . தேவையான பொருட்கள் : தட்டைப்பயறு 2 தம்ளர் (2 நபர்களுக்கு சமைக்க 200 கிராம் ) பெரிய வெங்காயம் 2 உப்பு தேவையான அளவு கடுகு சிறிதளவு கருவேப்பிலை சிறிதளவு பச்சை மிளகாய் 2 உருளைக்கிழங்கு 3 சோம்பு சிறிதளவு புளி சிறிதளவு ( 1/2 எழுமிச்சம்பழம் அளவு ) ...

September 30, 2015

சொந்த ஊர்

*என்னதான் Metro நகரங்களில் Multi lane சாலைகளில் Bike ஓட்டினாலும் ,சொந்த ஊரில் இருசக்கர வாகனத்தில் பல தெரிந்த முகங்களுக்கிடையே.,புன்னகையோடு *செல்லுவது ஒரு தனி சுகமே! சொந்த ஊரில் வசிப்பது ஒரு நல்ல நிரந்தர மனப்பான்மையை உருவாக்குகிறது.

May 4, 2014

கல்கியின் பொன்னியின் செல்வன்

படித்ததில் ரசித்தது! அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் மிக அருமையான வரலாற்று நாவல். சோழ குல அரசர்களின் சாதனைகளையும் சிறப்புகளையும் அருமையான விதத்தில் எடுத்து இயம்பிய விதம் என்னுள்ளே திரு கல்கியின் மற்ற நாவல்களையும் படிக்கவேண்டும் என்ற மட்டற்ற ஆவலை உண்டாக்கியிருக்கிறது. நமது கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் மிக இயல்பான மற்றும் சாதுர்யமான செய்கைகள் இந்த நாவலை படிப்பவர்க்கு ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்துகின்றன . தொடரும்…. கா.சிவா

July 25, 2013