சில எளிய வீட்டு மருத்துவ முறைகளும் சில மூலிகை செடிகளும் :
**ஒரு தொகுப்பு **
நம் முன்னோர்கள் பலப்பல இயற்க்கை மருத்துவ முறைகளையும் மூலிகைகளையும் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
அக்காலத்தில் பெரிய மருத்துவ வசதிகள் இல்லை எனினும் அவர்களால் ஆரோக்கியமாக வாழ முடிந்தமைக்கு காரணம் இந்த மூலிகைகளும் எளிமையான வீட்டு மருத்துவ முறைகளுமே!
அந்த மூலிகை செடிகளை பற்றிய தகவல்களையும் , மருத்துவ குணங்களையும் அழிய விடாமல் காப்பாற்ற ஒரு சிறிய முயற்சி.
- இந்த தகவல்கள் எல்லாம் நடைமுறைக்கு உட்படுத்த பட்டவை அல்ல. எச்சரிக்கையுடன் மட்டுமே பின்பற்ற வேண்டும்.
நான் எந்தவித இழப்பிற்கும் பொறுப்பல்ல.
உங்களுக்கு மூலிகை செடிகள் பற்றிய தகவலும் அதனுடைய மருத்துவ குணங்களும் தெரிந்தால் எனக்கு இ -மெயில் செய்யவும் .
**1. சிரியாநங்கைச் செடி **
இந்த செடி சாதாரணமாக சாலையோரம் மற்றும் வயல் வெளிகளில் மண்டிக்கிடக்கும். இந்த செடி அருகே பாம்பு போன்ற விசமுள்ள உயிரினங்கள் செல்லாது என்று சொல்வார்கள்.
இது தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் காணப்படுகிறது .
உடம்பில் அரிப்பு உள்ள இடங்களில் இதன் இலைகளை தடவினால் , அரிப்பு நிற்பதோடு , அந்த சொறி போன்ற தடங்கலும் மறைந்து விடும்.
- சொற்றுக்கற்றாழை