எனக்கு இந்த தட்டைப்பயறு குழம்பு ரொம்ப பிடிக்கும் , அதனால இன்னைக்கி அத ட்ரை செஞ்சேன் . நீங்களும் பிடிச்சிருந்தா செஞ்சு பாருங்க.
சரியா வரலன்னா பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் நு விட்டுடுங்க! :) :) :)
தட்டைப் பயறு குழம்பு எப்படி செய்வது பற்றிய சிறு குறிப்பு .
தேவையான பொருட்கள் :
-
தட்டைப்பயறு 2 தம்ளர் (2 நபர்களுக்கு சமைக்க 200 கிராம் )
-
பெரிய வெங்காயம் 2
-
உப்பு தேவையான அளவு
-
கடுகு சிறிதளவு
-
கருவேப்பிலை சிறிதளவு
-
பச்சை மிளகாய் 2
-
உருளைக்கிழங்கு 3
-
சோம்பு சிறிதளவு
-
புளி சிறிதளவு ( 1/2 எழுமிச்சம்பழம் அளவு )
-
மல்லிப்பொடி 3 தேக்கரண்டி
-
மிளகாய்ப்பொடி 1 தேக்கரண்டி
Here is my writing about Web application security.
செய்முறை:
-
முதலில் தாழிக்கிற தவா இல் தட்டைப்பயறைப்போட்டு நன்றாக வறுக்கவும். அல்லது நன்றாக ஊறவைத்த தட்டைப்பயறாக இருப்பின் வறுக்கத் தேவையில்லை.
-
புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் .
-
பிரஷர் குக்கரில் ஊறவைத்த அல்லது வறுத்த த. பயறை போட்டு அதற்க்கு மேல் 4 செண்டி மீட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை(ஊறிய பயறுக்கு) அல்லது மூன்று முறை விஷில் வர விடவும்.
-
இதனிடையே, உருளைக்கிழங்கு , பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவைகளை துன்டு செய்து வைத்துக்கொள்ளவும்.
-
தவா வில் சிறிது எண்ணை விட்டு, அதில் கடுகு , சோம்பு போட்டு சில நொடிகள் கழித்து, வெட்டி வைத்த உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய்,வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு நன்கு தாழிக்கவும்.
6. பிறகு புளி கரைத்த தண்ணீரை தவா வில் ஊற்றவும்.
7. பிரஷர் குக்கரில் இருந்து தட்டைப் பயறை எடுத்து தவா வில் ஏற்கனவே உள்ள புளித்தண்ணீர் ,உப்பு மற்றும் காய்கறிகளுடன் (உருளைக்கிழங்கு ,வெங்காயம் மற்றும் பிற ) இட்டு நன்கு கொதிக்க விடுக .
இப்போது சுடச்சுட தட்டைப்பயறு குழம்பு தயார் !!!