பயத்தை ஜெயிக்கிறது எப்படி? (Transcending Fear — A Modern Guide)

பயத்தை ஜெயிக்கிறதுங்குறது (Transcending fear) பயமே இல்லாம மாத்துறது கிடையாது. பயத்துக்கும் நமக்கும் இருக்குற உறவை மாத்துறதுதான். பயம்ங்குறது நம்மள காப்பாத்த இருக்குற ஒரு தற்காப்பு குணம் (survival mechanism). ஆனா, அது அளவுக்கு அதிகமா போகும்போது, ஒரு சாதாரண தோல்வியையோ இல்ல மத்தவங்க முன்னாடி வர்ற அவமானத்தையோ, ஏதோ உயிருக்கே ஆபத்து வர்ற மாதிரி நம்மள நம்ப வச்சிடுது. பயத்துல இருந்து வெளிய வந்து, அதை கடந்து போக சில முக்கியமான வழிகள்: 1. Deconstruct the Ghost (பயத்தை பிரிச்சு மேயுறது) பயம் எப்பவும் ஒரு தெளிவில்லாத, இருட்டான இடத்துலதான் பெருசா வளரும். அதை அப்படியே விடாம, வெளிச்சத்துக்கு கொண்டு வரணும். ...

July 10, 2026

நள்ளிரவுப் பயணமும், மிஸ்ஸான வெங்காயச் சமோசாவும்: ஒரு செம்மொழி எக்ஸ்பிரஸ் நினைவலைகள்!

நம்மில் எத்தனை பேருக்கு தினசரி ஓட்டப்பந்தய Routine வாழ்க்கையிலிருந்து சட்டென்று ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு எங்காவது கிளம்ப வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது? இந்த வாரம் வேலை நிமித்தமாக கோயம்புத்தூரிலிருந்து தஞ்சாவூருக்கு ஒரு பயணம் செய்ய வேண்டியிருந்தது. வேலை ஒருபுறம் இருந்தாலும், அந்த ரயில் பயணம் கொடுத்த நிம்மதியும், அனுபவமும் தான் இந்த பதிவின் ஸ்பெஷல்! அந்த நள்ளிரவு 12:30 குழப்பம் (A Classic Human Mistake!) கோயம்புத்தூரிலிருந்து மினிலைட் எக்ஸ்பிரஸ் போல கிளம்பும் செம்மொழி எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்திருந்தேன். ரயில்வே நேர கணக்கீட்டில் பலரும் செய்யும் ஒரு பொதுவான தவறு இருக்கிறது. நள்ளிரவு 12 மணி தாண்டினாலே அது அடுத்த நாளின் தேதியாக மாறிவிடும். 12:30 AM ரயில் என்றால், முந்தைய நாள் இரவே நாம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்க வேண்டும். ‘அடுத்த நாள் நைட்தானே ரயில்’ என்று நினைத்து பல பேர் ரயிலைத் தவறவிடுவதை பார்த்திருக்கிறோம். நல்லவேளையாக, நான் அலர்ட்டாக இருந்து சரியாக நள்ளிரவில் ஸ்டேஷனை அடைந்துவிட்டேன். ...

July 1, 2026

காலை நேரக் காற்றுடன் ஒரு சிறிய பைக் ரைடு: கோவையிலிருந்து சிறுமுகை வரை

வார இறுதி நாட்களின் காலைப் பொழுதுகள் எப்போதுமே ஒரு தனித்துவமான அமைதியைக் கொண்டிருக்கும். வழக்கமான அலார சத்தமும், அவசர அவசரமான அலுவலக ஓட்டமும் இல்லாத ஒரு சனிக்கிழமை காலை (ஜூன் 20), மனதிற்குள் ஒரு சிறிய சாகச எண்ணம் உதித்தது. படுக்கையை விட்டுச் சீக்கிரம் எழுந்து, புதிய ரைடிங் ஹெல்மெட்டை கையில் எடுத்தபோதே ஒரு புதிய பயணத்திற்கான உற்சாகம் தொற்றிக்கொண்டது. காலை 7 மணியளவில் என்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்தேன். கோவையிலிருந்து சிறுமுகையை நோக்கி ஒரு சிறிய ‘சோலோ ரைடு’ (Solo Ride) செல்வதுதான் அன்றைய திட்டம். 1. பயணத்தின் தொடக்கம்: குளிர்ந்த காற்றும், கூகுள் மேப்பும் ...

June 20, 2026

🎒 குச்சியில் தொங்கிய புத்தகப் பைகளும்... எங்கள் கிராமத்துச் சாலையும்!

1988-ஆம் வருஷம்… எல்கேஜி, யுகேஜி-னா என்னன்னே தெரியாத ஒரு காலம். என் தந்தை வேலை பார்த்த கொன்றைக்காடு பள்ளியில் தான் என்னோட முதல் வகுப்பைத் தொடங்கினேன். ஆனா எனக்கு வகுப்பறையை விட, ஸ்டாப் ரூம்ல (Staff Room) பெரிய மரப்பெட்டி மேல உட்கார்ந்துக்கிட்டு என் அப்பா வேலை பார்க்கிறதைப் பார்த்துட்டு இருக்குறது தான் ரொம்பப் பிடிக்கும். “இப்படியே அப்பா பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா படிப்பு என்னாகுறது?“ங்கிற தந்தையின் கவலை, என்னை அடுத்த வருஷமே எங்க ஊர் மாரியம்மன் கோவில் பக்கத்துல இருந்த பெரிய பள்ளிக்கு மாத்துச்சு. அங்க ஆரம்பிச்சது தான் அந்த மறக்க முடியாத நண்பர்கள் பயணம்! 🤝 டீம் ஒர்க்-னா என்னன்னு தெரியாத வயசுல ஒரு ‘குச்சி டீம்’! ...

April 27, 2026

ஒரு கோடைக்காலப் பயணம்!

🌾 என் வேர்களைத் தேடி: ஒரு கோடைக்காலப் பயணம்! வெயில் காலம் வந்துட்டாலே நம்ம ஊர் ஞாபகம் தானாவே வந்துடும்ல? சிட்டியில் இருக்குற ஏசி காத்தையும், டிராஃபிக் சத்தத்தையும் ஓரங்கட்டிட்டு, இந்த முறை என் குடும்பத்தோட என்னோட சொந்த ஊருக்குப் புறப்பட்டுட்டேன். தஞ்சாவூர் மாவட்டம்னாலே அந்தப் பசுமையும், கனிவான மனிதர்களும் தான் முதல்ல நினைவுக்கு வருவாங்க. அதுலயும் என் ஊரான **பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள ஒரு ** கிராமம் எனக்கு எப்போதுமே ஒரு சொர்க்கம் தான்! 🎒 குடும்பத்துடன் ஒரு குட்டி ரீயூனியன் பிள்ளைகளுக்கு சம்மர் ஹாலிடேஸ் விட்டாச்சு. அவங்களுக்கு மொபைலையும் ஐபேடையும் காட்றதை விட, நம்ம மண்ணோட வாசனையையும், கிராமத்து வாழ்வியலையும் காட்டணும்ங்கிறது தான் என் ஆசை. ஊருக்கு வந்து இறங்குன உடனே அந்தத் தனித்துவமான காத்து முகத்துல படும் பாருங்க… அதுல இருக்குற ஒரு நிம்மதி வேற எங்கயும் கிடைக்காது. ...

April 19, 2026

🏠 வேர்களைத் தேடி: அந்த வாசப்படியும், தந்தையின் போதனைகளும்!

என் பால்ய கால நினைவுகள் என்பது வெறும் கடந்த காலம் அல்ல; அது என் வாழ்வின் அடித்தளம். அந்த ஓட்டு வீடும், அதன் வாசப்படியும், என் தந்தையின் வார்த்தைகளும் இன்றும் என்னை வழிநடத்துகின்றன. 🐄 அதிகாலை விடியலும் எங்கள் வீட்டுப் பசுக்களும் எங்கள் விடியல் மிக அதிகாலையிலேயே தொடங்கிவிடும். எங்களிடம் இரண்டு பசுமாடுகள் இருந்தன, அவை வெறும் கால்நடைகள் அல்ல; எங்கள் குடும்ப உறுப்பினர்கள்! குட்டையக்கா: உருவத்தில் சற்று குட்டையாக இருந்ததால், அவளுக்கு அன்போடு வச்ச பேரு இது. வலம்பரி ஜெர்சி: இவள் ஒரு காளையைப் போல நல்ல உயரமாகவும் கம்பீரமாகவும் இருப்பாள். மதி அண்ணன் சரியா 5:30 மணிக்கே வந்து பால் கறந்து கொடுத்துடுவார். அப்பாவிடம் படித்த மாணவர் என்பதால் அந்த மாடுகளையும் எங்களையும் அவர் மிகுந்த அக்கறையோடு கவனிப்பார். அந்த அதிகாலை நேரத்து மாட்டுக்கொட்டகை வாசனை இப்போ நினைச்சாலும் மனசுல அப்படியே இருக்கு. ...

April 12, 2026

7-ஆம் வகுப்பு விடுமுறையும் அந்த 4 அடி காகிதக் காரும்:

நம்ம எல்லாருக்கும் சின்ன வயசுல ஒரு ‘கிரேஸி’ புராஜெக்ட் இருக்கும்ல? எனக்கு அப்படி அமைஞ்சதுதான் அந்த 7-ஆம் வகுப்பு கோடை விடுமுறை. அப்போதிலிருந்தே எனக்கு இந்த எலக்ட்ரானிக் பொருட்கள்னா அப்படி ஒரு ஆர்வம். கையில் ஒரு பழைய நேஷனல் பேனசோனிக் (National Panasonic) டேப் ரெக்கார்டரோ இல்ல மரத்தால் செஞ்ச ஸ்பீக்கரோ கிடைச்சா போதும்… அடுத்த நிமிஷம் அது போஸ்ட்மார்ட்டம் டேபிளுக்கு வந்துடும்! அதில் இருக்குற கெபாசிட்டரும், ரெசிஸ்டரும் எனக்கு வெறும் பாகங்களா தெரியாது; ஏதோ ஒரு குட்டி மனுஷ உருவம் மாதிரிதான் தெரியும். அந்தத் தேடலோட உச்சக்கட்டமா, சொந்தமா ஒரு காரை உருவாக்கணும்னு எனக்குள்ள ஒரு ஆசை வந்துச்சு. ...

March 22, 2026

🏛️ மதுரைப் பயணம்: அப்பாவிடம் கற்ற நேர்மையும் தமிழ் மீதான பற்றும்!

🏛️ மதுரைப் பயணம்: அப்பாவிடம் கற்ற நேர்மையும் தமிழ் மீதான பற்றும்! எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த வயதில், எம்.ஏ. தமிழ் படித்து வந்த என் அப்பாவுடன் நான் மேற்கொண்ட மதுரைப் பயணம், என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு பொக்கிஷம். வெறும் இடங்களைப் பார்ப்பதற்காக அல்லாமல், ஒரு தந்தையாக அவர் எனக்கு வாழ்வியல் பாடங்களைக் கற்றுக்கொடுத்த பயணம் அது. 🚌 உற்சாகமான தொடக்கம் அதிகாலை 6 மணிக்கே பேராவூரணி பேருந்து நிலையத்தில் ஓடிச் சென்று, ஜன்னல் ஓரத்திலிருக்கும் அந்த ‘மூன்று பேர் அமரும் சீட்டில்’ இடம் பிடித்தது இன்றும் பசுமையாக இருக்கிறது. பயணப் பாதை: பேராவூரணி ➔ அறந்தாங்கி ➔ மதுரை (மாட்டுத்தாவணி). ருசித்தவை: காரைக்குடியில் ஆவி பறக்கும் டீ, திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் விற்கப்படும் பிரம்மாண்டமான அதிரசம் மற்றும் மொறுமொறு முறுக்கு. சுமார் 6 மணி நேரப் பயணம் முழுவதும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தது ஒரு தனி சுகம்! ...

March 15, 2026
மதுரை பெரியார் பேருந்து நிலையம் — அம்மாச்சியைச் சந்திக்கும் குடும்பப் பயணம்

மதுரை: அம்மாச்சியின் மடியும், அந்தப் பொற்கால நினைவுகளும் (1993-1999)

ஆண்டுத் தேர்வுகள் முடிந்து, ஏப்ரல் மாதம் விடைபெற்று, மே மாத கோடை விடுமுறை தொடங்குகிறது என்றாலே, எங்கள் வீட்டில் ஒருவிதமான உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அந்த மாதத்தின் மிக முக்கியமான, நான் ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு: மதுரைக்கு, எங்கள் அம்மாச்சி வீட்டுக்குப் பயணம்! அம்மாவுடனும் தம்பியுடனும் சேர்ந்து நான் மேற்கொள்ளும் அந்தப் பயணம், இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற அந்த எளிய நாட்களில், மதுரை என்றாலே அது ஏதோ ஒரு மாயாஜால உலகம் போல எனக்குத் தோன்றும். விடியலில் தொடங்கிய பயணம் பயண நாளன்று அதிகாலை 5 மணிக்கே எங்கள் வீடே பரபரப்பாகிவிடும். காளகத்திலிருந்து (Kaalagam) கிளம்பி, 5.15 மணி வாக்கில் ‘ஏ.கே.என்’ (AKN) பேருந்தைப் பிடித்து பேராவூரணி பேருந்து நிலையத்திற்குச் செல்வோம். ...

December 14, 2025

இணைக்கப்பட்ட வாகனங்கள் (Connected Vehicle Solutions)

நாம் வாழும் உலகம் இன்று வேகமாக டிஜிட்டல் மாற்றங்களை அனுபவிக்கிறது, அதில் Connected Vehicle Solutions (இணைக்கப்பட்ட வாகன தீர்வுகள்) முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு வாகனமும் ஒட்டுமொத்த சேவைகளின் ஒரு பகுதியாக மாறி, தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு நேரடி நவீன உலகத்தை உருவாக்குகின்றன. நாம் நாள்தோறும் காணும் வாகனங்கள் இனி காற்றில் பறக்கும் தகவல் மையங்களாக இருப்பது இதன் சிறப்பு. சாலை பாதுகாப்பு, எரிபொருள் திறமையை மேம்படுத்துதல், ரியல்-டைம் நவிகேஷன், அத்துடன் பயணிகளை பாதுகாப்பாக சென்று சேர்ப்பது—இவை அனைத்திற்கும் தகுந்த தீர்வுகளை வழங்குகின்றன. Connected Vehicle Solutions என்றால் என்ன? பொதுவாக, இதன் மூலம் வாகனங்கள்: ...

April 26, 2023